பிளாக்கர் தளத்தில் "Newer Posts" "Older Posts" என்பவற்றை நீக்க...

Posted by மிக்கி On Wednesday, February 25, 2009

Blogger வலைப்பதிவுகளில் காணப்படும் "Newer Posts" "Older Posts" என்பவற்றை எவ்வாறு நீக்குவது என பார்ப்போம்

நீங்கள் இடும் பதிவுகளுக்கு கீழே உங்கள் கையெழுத்தை காட்டுவது எப்படி?

Posted by மிக்கி On Friday, February 06, 2009

உங்கள் வலைப்பதிவுகளில் நீங்கள் இடும் பதிவுகளுக்கு கீழே உங்கள் கையெழுத்தை ( signature ) எப்படி காட்டுவது என பார்க்கலாம். உதாரணத்திற்கு இந்த இடுகை முடிவில் பார்க்கவும்.

Blogger தளங்களின் தலைப்பகுதியில் புதிய Gadgets இணைப்பது எப்படி?

Posted by மிக்கி On Friday, January 30, 2009

01. முதலில் உங்கள் blogger தளத்தை திறந்து Layout பகுதிக்கு செல்லவும். 02. EditHTML இல் அழுத்தவும். 03. இப்போ கீழே இருப்பதை தேடிப்பிடிக்கவும்.

பிளாக்கர் பதிவுகளில் மறுமொழியிடுவோர் படம் காட்ட..

Posted by மிக்கி On Sunday, January 25, 2009

உங்கள் வலைப்பதிவில்பின்னூட்டமிடுவோர் படங்களை காட்டுவது எப்படி என பார்க்கலாம். உதாரணத்துக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

உங்கள் வலைப்பதிவில் பதிவுகள், மறுமொழிகள் எண்ணிக்கையை காட்ட..

Posted by மிக்கி On Saturday, January 24, 2009

உங்கள் வலைப்பதிவில் நீங்கள் எழுதிய பதிவுகள் மற்றும் வாசகர்கள் இட்ட மறுமொழிகளின் எண்ணிக்கையை காட்ட வேண்டுமா?

இலவச அழகிய பிளாக்கர் வார்ப்புரு (free blogger template)

Posted by மிக்கி On Thursday, June 25, 2009

மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஒரு அழகிய பிளாக்கர் வார்ப்புருவை உருவாக்கியுள்ளேன். இதில் உள்ள வசதிகள்

wordpress பதிவர்களுக்கு - உங்கள் தளத்தை நீங்களே தயாரிக்க..

Posted by மிக்கி On Saturday, March 07, 2009

wordpress பதிவர்களே, உங்கள் தளத்தை நீங்களே வடிவமைக்க கீழே உள்ள மென்பொருள் உதவுகிறது. இதை தரவிறக்கி நிறுவிக்கொண்டு நீங்கள் விரும்பியபடி உங்கள் தளத்தை வடிவமைத்துக்கொள்ளலாம்.

விண்டோஸ் XP திரையை மாற்றுவது எப்படி?

Posted by மிக்கி On Sunday, January 18, 2009

நாம் ஒவ்வொரு முறையும் கணினியை ஆன் பண்ணும் போது மேலே உள்ள windows xp திரை தோன்றி நமக்கு சலிப்பை தருகிறது. இதை எவ்வாறு மாற்றுவது என பார்ப்போம்.

மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதிய TOOLBAR

Posted by மிக்கி On Wednesday, August 27, 2008

மேம்படுத்தப்பட்ட பல வசதிகளுடன் புதிய Toolbar ஒன்றை உருவாக்கியிருக்கிறேன். இதில் இணைக்கப்பட்டுள்ள வசதிகள்.

தேடுபொறிகளில் உங்கள் பக்கம் முன்னனியில் வர

Posted by மிக்கி On Tuesday, August 26, 2008

இன்று அதிகமானவர்கள் தேடுபொறிகளின் உதவியுடன் தான் பல வலைப்பக்கங்களுக்கு வருகின்றார்கள்.நம் பதிவுகள் தேடுபொறிகளால் தேடமுடியாது போனால் என்ன தான் நாம் மாங்குமாங்கு என்று பதிவெழுதியும் பிரியோசனம் இல்லாமல் போய்விடும்

Youtube உம் நீங்களும்

Posted by மிக்கி On Sunday, May 25, 2008

இன்றைய இணைய உலகில் அதிகளவு மக்கள் செல்லும் ஒரு தளமாக youtube தளம் இருக்கின்றது. சில வேளைகளில் எமது கணினியில் இருந்து youtube இணையத்தளத்திற்குள் செல்லமுடியாத நிலை நம்மில் பல பேருக்கு ஏற்பட்டிருக்கலாம்.

தமிழ்மண நிர்வாகிகள் பதிவுகளின் தலைப்பை மட்டுறுக்க தொடங்கினாலும் தொடங்கினார்கள் அவனவன் எதிர் பதிவுகள் போடத்தொடங்கி தமிழ்மணத்தை சூடாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நம்ம பங்கிக்கும் ஏதாவது எழுதனுமே என்பற்காக இந்த பதிவு

தமிழ்வலைத் திரட்டிகளில் முன்னணியில் தமிழ்மணம் இருக்கிறது. அதிக வாசகர்களை வலைப்பதிவுக்கு கொண்டுவருவதும் தமிழ்மணம் தான். காரணம் மிக வேகமாக பதிவுகளை திரட்டுவதும் வலைப்பதிவர்கள் தம் தளத்திலிருந்தே பதிவுகளை சுலபமாக இணைக்கக் கூடியவாறு கருவிப்பட்டையை கொண்டிருப்பதுமாகும். தமிழில் தேன்கூடு, தமிழ்வெளி திரட்டி, தமிழூற்று போன்ற பல திரட்டிகள் இருந்தாலும் அவை எல்லாவற்றையும் தாண்டி முன்னணியில் ஆட்சி செலுத்திக்கொண்டிருக்கிறது தமிழ்மணம்.

ஆனால் தற்போது சின்னப்பிள்ளத்தனமான சில வேலைகளை தமிழ்மண நிர்வாகிகள் செய்துகொண்டிருக்கிறார்கள். பதிவர்களின் சம்மதமில்லாமல் அவர்களுக்கு அறிவிக்காமல் அவர்களின் பதிவுகளின் தலைப்பை மட்டுறுத்துகின்றார்கள். கேட்டால் தமிழ்மணம் நாறுகிறது அதனால் வாசனையூட்டுகின்றோம் என்கிறார்கள்.

காமக்கதைகள், ஜட்டிக்கதைகள் என்று தலைப்பு வைத்தால் தமிழ்மணம் நாறிவிடுமாம். அப்படியானால் தற்போது என் மீது மூத்திரம் பெய்யுங்க, ஓண்ணுக்கடிக்க வாரிங்களா? என்று தமிழ்மணத்தில் தலைப்பு வருதே இப்போ நாறவில்லையா? அல்லது தமிழ்மணம் ஒண்ணுக்கடிக்கும் இடமா?

சில மாதங்களுக்கு முன் தமிழச்சி என்னும் சிறந்த பதிவர் ஒருவரை தமிழமண நிர்வாகிகள் தமிழ்மணத்தில் இருந்து நீங்கியது எல்லோரும் அறிந்ததே. காரணம் அவர் சில கெட்ட வார்த்தைகளை பதிவில் பாவிச்சாராம். இந்த இடத்தில் எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. தமிழ்மணம் என்பது ஒரு பொதுத்திரட்டியா? அல்லது ஆளாளுக்கு ஏற்றபடி பதிவுகளை திரட்டுகிறதா? புதிய பதிவர்கள் ஏதாவது   எழுதினால் காச்சுமூச்சு என கத்தும் நிர்வாகம் பழைய பதிவர்கள் என்றால் மௌனமாக இருப்பது ஏன்?

ஒருவர் காமக்கதைகள் படிக்கணும் என்றால் தமிழ்மணத்துக்கு வந்துதான் படிக்கணும் என்றில்லை. அதற்கு எத்தனையோ தேடுபொறிகள் இருக்கின்றன. அதில் காமக்கதைகள் என்று எழுதி அழுத்தினால் போதும் கிளுகிளுப்பான எத்தனையோ கதைகள், விடியோ படங்களும் கிடைக்கும்.

இந்த இடத்தில் தமிழ்மணம் ஒன்றை யோசிக்கவேண்டும், பதிவர்கள் ஏன் அப்படி தலைப்பிடுகிறார்கள் என்று. இப்படி தலைப்பு வைப்பதற்கு தமிழ்மணமும் ஒரு காரணம். என்னடா இவன் இப்படி சொல்கிறான் என்று நினைக்கிறீர்களா?

அதாவது தமிழ்மணத்தில் பதிவர்களின் பதிவுகள் சில நிமிடங்களே முகப்பில் தெரிகிறது. அதன்பின் முகப்பிலிருந்து காணாமல் போயிவிடும். தொடர்ச்சியாக தெரியனுமென்றால் அது சூடான இடுகையில் இடம்பெறவேண்டும். சூடான இடுகைக்கு வர சூடான, கிளுகிளுப்பான தலைப்புகள் வைக்கவேண்டும். அப்படி வைத்தால் அதிக வாசகர் கவனத்தை கவர்ந்து சூடான இடுகையில் இடம்பிடித்துவிடும். இந்த ஒரு காரணத்துக்காகத்தான் தலைப்புகள் எல்லாம் சூடாகின்றனவே தவிர எந்தவொரு பதிவரும் கிளுகிளு பாலான கதைகள் எழுதவேண்டுமென்று ஒரு போதும் நினைப்பதில்லை.

பல பதிவர்களை உருவாக்கிறது தமிழ்மணம். அப்படியான தமிழ்மணத்தின் தற்போதைய போக்குகள் பதிவர்களின் மனதில் வெறுப்பை உண்டாக்கி விடக்கூடாது.

இனி கவனிக்க வேண்டியவை

1. தமிழ்மணத்தில் இருந்து சூடான இடுகைகள் பகுதியை நீங்க வேண்டும். சூடான இடுகையில் இடம்பிடிக்கத்தான் பதிவர்கள் தலைப்பை சூடாக வைக்கிறார்கள். அப்படி ஒன்று இல்லாவிட்டால் சூடான தலைப்புகள் வைக்க தேவையில்லாமல் போய்விடும்.


2. பதிவர்களின் பதிவுகள் தமிழ்மணத்தில் அதிகநேரம் தெரியும்படி செய்யவேண்டும்.

3. பதிவுகளின் தலைப்புகளை மட்டுறுக்கவோ, பதிவர்களை நீங்கவோ முன்னர் அவர்களுக்கு அறிவிக்கவும்.

4. பதிவர்கள் அனுப்பும் மின்னஞ்சலுக்கு தயவுசெய்து பதில் அனுப்பவும்.


இனி வலைப்பதிவர்களுக்கு சில வரிகள்.



1. சூடான இடுகையில் இடம்பெறவேண்டும் என்பற்காக பதிவு எழுதாதீர்கள். உங்கள் எழுத்து மற்றவர்களை கவருமிடத்து சூடான இடுகை இல்லாமலே உங்களின் தளத்திற்கு வாசகர்கள் வருவார்கள்.

2. உங்களின் பதிவுகள் சில வேளைகளில் சிறுவர்களை கூட கவரலாம் என்பதை மனதில் வைத்து தகாத வார்த்தைகளை தவிர்க்கலாம்.

3. தமிழ்மணமே கதி என்று இருக்காமல் மற்ற திரட்டிகளுக்கும் இணைப்புக் கொடுத்து அவர்களையும் ஊக்குவித்தால் எதிர்காலத்தில் தமிழ்மணம் போல பல திரட்டிகளை உருவாக்கலாம்.
 
இவை அனைத்தும் எனது சொந்த கருத்துக்களே. யாரையும் குறிவைத்து எழுதவில்லை. இது பற்றிய உங்களின் கருத்துக்களை பின்னூட்டமிடுங்க.

வாசகர்கள் படித்துள்ளனர்.


12 Response to "வலைப்பதிவுலகில் தமிழ்மணம் ஒரு தடைக்கல்லா?"

  1. தமிழ்மணம் வாழ்க..
    பாரிஸ் திவா வாழ்க...

     

  2. Anonymous Said,

    //இவை அனைத்தும் எனது சொந்த கருத்துக்களே. யாரையும் குறிவைத்து எழுதவில்லை. இது பற்றிய உங்களின் கருத்துக்களை பின்னூட்டமிடுங்க.//
    உண்மை இது தான். பலரும் சொல்லத்தயங்கிய ஒன்றை ஒருத்தர் சத்தமாக சொன்னார். ஆனால் அவர் பிரச்சினைக்குறிய ஆள் என்பதால் அவர் சொன்ன அதாவது பதிவர்களுக்கு அவர் தம் நலம் விரும்பி சொன்ன விசயத்தை திரித்து குழப்புவதாக கண்டுபிடிப்பளர் சொல்ல இவரும் பதிலுக்கு சத்தம் போட பிரச்சினை பெரிதாகி வெடித்திருக்கிறது. அதே சமயம் நீங்கள் சொல்லும் கருத்துக்கு பலரும் உடன்பட்டாலும் எங்கே நாளை நாமும் தூக்கப்படுவோமோ என்று பயம் இருக்கிறது பலருக்கும். பாருங்கள். உங்கள் தைரியம் எனக்கிருந்தால் நான் ஏன் அனானியாக இதை எழுதுகிறேன்? எல்லாம் பயம். நின்னால் பயம் எழுதினால் பயம் பின்னூட்டினால் பயம். தெனாலி போல எங்கள் நிலைமை. மொக்கைச்சாமியே சரணம்

     

  3. கொழுவி Said,

    காமக்கதைகள், ஜட்டிக்கதைகள் என்று தலைப்பு வைத்தால் தமிழ்மணம் நாறிவிடுமாம். அப்படியானால் தற்போது என் மீது மூத்திரம் பெய்யுங்க, ஓண்ணுக்கடிக்க வாரிங்களா? என்று தமிழ்மணத்தில் தலைப்பு வருதே இப்போ நாறவில்லையா?//

    இப்போ என்ன சொல்ல வர்றீங்க.. ?
    பின்னையவற்றை அனுமதித்திருப்பதால் முன்னையவற்றையும் அனுமதிக்கணுமா? அல்லது முன்னையவற்றை தணிக்கை செய்ததால் பின்னையவற்றையும் தணிக்கை செய்ய வேண்டுமா?

     

  4. கொழுவி Said,

    ஆகா என்பின்னூட்டத்தோடு ஒரு கேள்வியிட்டேனே.. காணலையே.. எனக்கு அறிவிக்காமலேயே மட்டுறுத்தியாச்சா..

    சரி.. அதை நான் ஒரு பதிவா போட்டு விடுகிறேன்.

     

  5. // அதிஷா said...
    தமிழ்மணம் வாழ்க..
    பாரிஸ் திவா வாழ்க... //


    நன்றி அதிஷா

     

  6. பாரிஸ் திவா Said,

    // Anonymous said...
    உங்கள் தைரியம் எனக்கிருந்தால் நான் ஏன் அனானியாக இதை எழுதுகிறேன்? //


    தட்டிக்கொடுப்பதும் தட்டிக்கேட்பதும் பதிவர்கள் கடமை

     

  7. பாரிஸ் திவா Said,

    // கொழுவி said...
    ஆகா என்பின்னூட்டத்தோடு ஒரு கேள்வியிட்டேனே.. காணலையே.. எனக்கு அறிவிக்காமலேயே மட்டுறுத்தியாச்சா..//

    அது இந்த பதிவுக்கு சம்மந்தமில்லாதது

     

  8. Anonymous Said,

    //தமிழச்சி என்னும் சிறந்த பதிவர்//

    சிரிப்பு சிரிப்பா வர்தே

     

  9. கொழுவி Said,

    அது இந்த பதிவுக்கு சம்மந்தமில்லாதது //

    ஒருவேளை தமிழ்மணமும் தனக்கு பொருந்தாதவற்றை மட்டுறுத்துகிறதோ என்னமோ.. ? என்ன சொல்றீங்க.. ?

     

  10. Anonymous Said,

    எனக்கு ஒன்று மட்டும் புரியல, தமிழ்மணம் தடைக்கல்லா இருந்தா (நீங்க மட்டுமில்ல, தமிழ்மணத்த திட்டற எல்லோரும்) அதன் பட்டைய ஏன் இன்னும் உங்க பதிவுல வெச்சுருக்கீங்க :-P
    - மணி

     

  11. paris thiva Said,

    // Anonymous said...
    எனக்கு ஒன்று மட்டும் புரியல, தமிழ்மணம் தடைக்கல்லா இருந்தா (நீங்க மட்டுமில்ல, தமிழ்மணத்த திட்டற எல்லோரும்) அதன் பட்டைய ஏன் இன்னும் உங்க பதிவுல வெச்சுருக்கீங்க :-P
    - மணி //

    தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள் மணி. நான் ஒன்றும் தமிழ்மணத்திற்கு எதிரானவன் அல்ல. சில தவறுகளை சுட்டிக் காட்டியுள்ளேன். அவ்வளவுதான்

     

  12. Anonymous Said,

    சரியான நேரத்தில் சரியான கருத்தை சொன்ன தங்களின் பதிவை தமிழ்மணம் மறைக்கலாம்

     

Post a Comment

    About Me

    My Photo
    மிக்கி
    View my complete profile

    தொடர்பு கொள்ள...

    Blog Archive

    Recent Posts

    Recent Comments

    NATHIYOSAI GAMES