சிகரட் பிடிப்பதை தடுக்க புதியமுறை
Posted by paris thiva in அறிவியல், உலகம், சமூகம்
ஜப்பானில் பள்ளி மாணவ மாணவியர்கள் சிகரெட் பிடிப்பது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க ஜப்பானிய அரசு பல நடவடிக்கைகள் எடுத்தும் பயனளிக்காத நிலையில் தற்போது புதிய முறையை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்படி சிகரெட் விற்பனைக்கு கமெரா பொருத்தப்பட்ட தானியங்கி மெசின்கள் ஜப்பானில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இவை "பேஷியல் ரெகக்னேஷன்’ முறையில் 20 வயதிற்கு குறைவானவர்களை கண்டு பிடித்து அவர்கள் இடும் பணத்தை வெளியே தள்ளிவிடும். "பேஷியல் ரெகக்னேஷன்’ முறையில் இந்த மெசின்களில் பொருத்தப்பட்டுள்ள கமெரா தன்முன் நிற்கும் மனிதரின் முகம், எலும்பு வளர்ச்சி, தோல் முதிர்ச்சி போன்றவற்றை துல்லியமாக உள்வாங்கி உள்ளே இருக்கும் கணினிக்கு அனுப்புகிறது. கணினி அவற்றை சரிபார்த்து 20 வயதிற்கு மேற்பட்டவர் என்று உறுதி செய்தால் தான் தானியங்கி இயந்திரம் காசை உள்வாங்கிக் கொண்டு சிகரெட் பெட்டியை வெளியே தள்ளும்.
இதன் முதற்கட்டமாக பல்லாயிரக் கணக்கானவர்கள் ஆராட்சிக்கு உட்படுத்தப்பட்டனர். முதிர்ச்சியான தோற்றத்துடன் காணப்படும் இளைஞர்களையும், இளமையான தோற்றத்துடன் காணப்படும் முதியவர்களையும் இனம் கண்டு கொள்வது இந்த மெசின்களின் சிறப்பம்சமாகும்