வேட்டைக்காரன்

Terminator III

Dindugal Sarathy

ஸ்பைடர் மேன்

Youtube உம் நீங்களும்

Sunday, May 25, 2008

இன்றைய இணைய உலகில் அதிகளவு மக்கள் செல்லும் ஒரு தளமாக youtube தளம் இருக்கின்றது. சில வேளைகளில் எமது கணினியில் இருந்து youtube இணையத்தளத்திற்குள் செல்லமுடியாத நிலை நம்மில் பல பேருக்கு ஏற்பட்டிருக்கலாம். எமது இணையஉலாவியில் youtube முகவரியை ரைப்பண்ணியதும் இணையஉலாவி காணாமல் போவதுடன் youtube is banned you fool The administrators didnt write this program guess who did?? MUHAHAHA!! என்ற செய்தியும் சிறு பெட்டியில் தோன்றும். ஏன் இப்படி வருகிறது, இதை எவ்வாறு சரிசெய்யலாம் என இப்போது பார்ப்போம்.

இப்படி ஒரு நிலை உங்களுக்கு எற்பட்டால் உங்கள் கணினியில் Heap41a / win32.USBworm என்ற வைரஸ் பரவியுள்ளது என்று அர்த்தம். இந்த வைரஸை உருவாக்கியவர் பெங்களூரைச் சேர்ந்த ஒரு இந்தியர். இவ்வைரஸ் USB pen drives மற்றும் removable storage devices மூலமாக பரவுகின்றது. இதை உங்கள் கணினியிலிருந்து அழிக்க

CRTL+ALT+DELETE பட்டன்களை அழுத்தவும். திரையில் தோன்றும் பெட்டியில் processes என்பதை அழுத்தவும்.இப்போது மிக கவனமாக உங்கள் பெயரில் இருக்கும் svchost.exe என்ற பைலை தேடிப்பிடித்து RIGHT CLICK பண்ணி END PROCESS பண்ணவும் ( கவனிக்க வேண்டியது உங்கள் பெயரிலிருக்கும் svchost.exe பைலை மட்டும் தான் மாத்தணும். மற்ற பைல்களை தொடாதீங்க)

இனி கீழே உள்ள மென்பொருளை தரவிறக்கி வைரஸை ஓட ஓட விரட்டுங்க.

Download Worm Removal tool

இறந்த பெண் உயிருடன் எழுந்தார்

Sunday, May 18, 2008

அமெரிக்காவில் மேற்கு விர்ஜினியா மாநிலத்தில் வசிக்கும் 59 வயதான விலா தாமஸ் அண்மையில் மூளை பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் டாக்டர்கள் அவருக்கு செயற்கைச் சுவாசம் அளித்து பலமணிநேரமாக சிகிச்சையளித்தும் அவரது மூளையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் அவர் இறந்துவிட்டார் என மருத்துவர்கள் அறிவித்தனர்.


ஆனால் தாமஸின் உறவினர்கள் அவர் இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறியதை நம்பவில்லை. இன்னும் சிலமணி நேரம் அவருக்கு சிகிச்சையளிக்கும்படி கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து மீண்டும் தாமஸின் உடலுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. 17 மணிநேர சிகிச்சைக்கு பின்னரும் அவரின் மூளையில் எந்த அதிர்வும் காணப்படாததால் அவர் இறந்து விட்டதை உறுதிசெய்த டாக்டர்கள் அவருக்கு அளித்த சிகிச்சையை நிறுத்தி அவரின் உடம்பிலிருந்து ஒயர்கள், செயற்கை சுவாச மிஷின் போன்றவற்றை அகற்றினார்கள்.

10 நிடங்களின் பின்னர் தாமஸின் கால்கள் அசைவதை கண்ட நர்ஸ் அதிர்ச்சியடைந்து டாக்டரை அழைத்தார். டாக்டர் பரிசோதித்தபோது தாமஸின் உடலில் எந்த மாற்றமும் தெரியவில்லை. ஆனால் சில நிமிடங்களில் படுக்கையில் இருந்து எழுந்து தன் உறவினருடன் கதைக்க தொடங்கிய தாமஸை கண்ட டாக்டர்கள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர்.

படுக்கையிலிருந்து எழுந்த விலா தாமஸ் "கடவுள் என்னை அழைக்கமாட்டார் என்று தெரியும். அவர் எனக்கு காட்டிய கருணைதான் நான் உயிருடனிருக்க காரணம்’ என்று கூறினார்.

சூப்பஸ்ரார் ஆசியுடன் மீண்டும் பில்லா

Thursday, May 1, 2008

அஜித் நடித்து அண்மையில் வெளியான பில்லா திரைப்படம் உலகெங்கும் சக்கைப்போடு போட்டு வசூலை குவித்தது நாம் எல்லோரும் அறிந்த விடயம். பிரான்ஸில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு பில்லா திரைப்படம் தெரிவு செய்யப்பட்டதும் நாம் அறிந்ததே.


கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு செல்லும் முன் பில்லா-2 படத்தில் நடிக்க அஜித் சம்மதம் தெரிவித்திருக்கிறார். படத்தை தயாரிக்கப்போவதும் இயக்கப்போவதும் வேறு யாருமல்ல நம்ம சூப்பஸ்ராரின் மகள் சௌந்தர்யா தான்.

தான் இயக்கிய சுல்தான் தி வாரியர் படத்தின் சில காட்சிகளை அஜித்திற்கு போட்டு காட்டினார் சௌந்தர்யா. படத்தை பார்த்து வியந்த அஜித் பில்லா-2 படத்தை சௌந்தர்யா இயக்க சம்மதம் தெரிவித்தார்.

சூப்பஸ்ரார் ஆசியுடன் இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கிவிடும். கூடிய சீக்கிரம் மீண்டுமொரு பில்லா அஜித்தை பார்க்கலாம்.