நயன நடிகையின் அடி மனசு ஆசையை சமீபத்தில் அவர் வாயாலேயே கேட்டிருக்கிறார் ஒருவர். அது மாலை மயங்கிய நேரம் என்பதால், அளவுக்கு மீறி உண்மையை கக்கியிருக்கிறார் நடிகையும்! அப்படி என்னதான் பேசினாராம்? நானும் அவனும் நிஜமா காதலிச்சோம். அவனை நம்பி எல்லாத்தையும் கொடுத்தேன். ஆனால் என்னை ஏமாத்திட்டான். இனிமே என் வாழ்க்கையிலே காதலே இல்லை. சம்பாதிக்கணும். நிறைய சம்பாதிக்கணும். கோடி கோடியாக சம்பாதிச்சு வெளிநாட்டிலே செட்டில் ஆகணும். அதுக்காக எப்படி வேணும்னாலும் இருப்பேன். எப்படி வேணும்னாலும் நடிப்பேன்.
அதிர்ச்சிக்குள்ளான அந்த வி.ஐ.பி 'அவன் அவன்னு சொல்றியே, அது யாரும்மா?' என்றாராம் பக்குவமாக. 'ஊருக்கே தெரிஞ்சிருக்கு. உனக்கு தெரியலையே' என்று நயன நடிகை கண்களை சுழற்ற, அதுவரை உளறியதை அங்கேயே எரேஸ் பண்ணிவிட்டு நடையை கட்டினாராம் வி.ஐ.பி. இப்போது புரிகிறதா, நடிகையின் அளவுக்கு மீறிய கவர்ச்சிக்கு காரணம் என்ன என்று?
இன்று அதிகமானவர்கள் தேடுபொறிகளின் உதவியுடன் தான் பல வலைப்பக்கங்களுக்கு வருகின்றார்கள்.நம் பதிவுகள் தேடுபொறிகளால் தேடமுடியாது போனால் என்ன தான் நாம் மாங்குமாங்கு என்று பதிவெழுதியும் பிரியோசனம் இல்லாமல் போய்விடும். தேடுபொறிகளுக்கு இசைவாக எமது பதிவின் தலைப்புகளை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என பார்ப்போம்.
பொதுவாக நாம் எழுதும் பதிவுகள் Blog Title + Post Title என்று தான் வெளியிடப்படும். இதை மாற்றி Post Title + Blog Title என் தோன்றவைக்க வேண்டும்.
அதற்கான வழிமுறைகள்
1. உங்கள் பிளாக்கர் ஐ திறவுங்கள்
2. Layout இல் அழுத்துங்கள்
3. Edit HTML இல் அழுத்துங்கள்
4. உங்கள் HTML பக்கத்தில் கீழே உள்ள வரியை தேடிப்பிடியுங்கள்.
<title><data:blog.pageTitle/></title>
5. அந்த வரியை எடுத்துவிட்டு கீழே இருக்கும் வரியை சேருங்கள்
<!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> <b:if cond='data:blog.pageType == "index"'> <title><data:blog.pageTitle/></title> <b:else/> <title><data:blog.pageName/> ~ <data:blog.title/></title> </b:if> <!-- End www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag -->
6. SAVE பண்ணுங்கள்.
அவ்வளவு தான் இனி நீங்கள் எழுதும் இடுகைகள் Post Title + Blog Title என்று தோன்றும்.
நவீன வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கம், கண்ட கண்ட உணவுகளை உண்பது போற்ற காரணங்கள் இன்றைய இளம் பெண்கள் பலருக்கு மார்பக புற்று நோய் ஏற்படுகின்றது. இங்கிலாந்தைச் சேர்ந்த சில டாக்டர்கள் நடத்திய ஆய்வில் சந்தோஷமான வாழ்க்கை நடத்தும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக காணப்படுவதாக கண்டறிந்துள்ளனர்.
இவர்கள் 450 பெண்களிடம் மேற்கொண்ட ஆய்வில் எப்போதும் மகிழ்ச்சியாகவும், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுடனும் இருக்கும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படவழி இல்லை என்கிறார்கள்.
ஆக இனி பெண்கள் எல்லோரும் சீரியல் பார்த்து அழுதுகொண்டிருக்காமல் சந்தோசமாக வாழ்க்கையை அனுபவியுங்கள். நன்றாக தூங்கி கனவு காணுங்கள். அடிக்கடி கனவு காண்பது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதுடன் சிக்கலான பிரச்சினைகளை திறமையாக சமாளிக்கும் சக்தியை கொடுக்கிறது
சூப்பர் ஸ்டார் ரஜினியின் குசேலன் படம் வெளிவந்து சில தினங்களில் அந்தப் படம் தோல்வி என்றும், நஷ்டம் என்றும் முழுமயாக முடிவு செய்துவிட்டனர் திரையரங்கு உரிமையாளர்கள். இது ஒட்டுமொத்த திரையுலகையே திகைக்க வைத்திருக்கிறது. கேட்டால் எம்ஜி தொகை அதிகமாகக் கொடுத்து விட்டோம். அதை ஈடுகட்டும் அளவுக்கு அடுத்தடுத்த வார வசூல் நிலவரம் இல்லை, என்கிறார்கள்.
ஆனால் பிரமிட் சாய்மிரா நிறுவனத் தலைவர் சுவாமிநாதனோ, இதுவரை இந்தப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.26 கோடி வசூலித்திருப்பதாகக் கூறுகிறார். எண்பது திரையரங்குகளின் ஒரு வார வசூல் ரூ.8 கோடி, சென்னை நகர் வசூல் மட்டும் ரூ.4.43 கோடிகள் என புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அப்படியானால் நஷ்டம் எங்கிருந்து வந்தது.
ஆனால் இது எதனையும் காது கொடுத்து கேட்கும் நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் இல்லை. வேறு வழியில்லாமல் "குசேலன் திரைப்படத்தால் தங்களுக்கு நஷ்டம்" என்று புகார் கொடுத்துள்ள திரையரங்கு உரிமையாளர்கள் அனைவருக்கும், தான் விநியோக உரிமை பெற்றுள்ள சரோஜா திரைப்படத்தை இலவசமாக பிரமிட் சாய்மிரா நிறுவனம் வழங்குகின்றது.
இப்போது குசேலன் ஓடிக்கொண்டிருக்கும் அனைத்து திரையரங்குகளுக்கும் ஒரு பைசா கூட பெற்றுக் கொள்ளாமல் சரோஜாவைத் தருகிறார்கள் பிரமிட் சாய்மிரா. ஆக, ஒரு பெரிய பட்ஜெட் படத்தையே இலவசமாகக் கொடுக்கும் அளவுக்கு பிரமிட் சாய்மிரா லாபம் பார்த்திருக்கிறது குசேலனில்,லாபத்தை விட சாய்மிராவுக்கு குசேலனால் நஷ்டமில்லை என்பதுதான் உண்மை.
சாய்மிராவின் இந்த முடிவு எதிர்காலத்தில் தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானதல்ல.இனிவரும் காலங்களில் ஒரு படம் முதல் இரு வாரங்களுக்குள் லாபம் சம்பாதிக்காவிட்டால் தோல்விப் படம் என முத்திரை குத்தி வேறொரு படத்தை இலவசமாக வாங்க திரையரங்கு உரிமையாளர்கள் முயல்வார்கள்.
கோடம்பாக்கத்தின் தற்போதைய லேட்டஸ் நியூஸ் சூப்பர் ஸ்ரார் ரஜினியின் புதிய படம் பற்றிய செய்திகள் தான். குசேலன் படத்தில் ஏற்பட்ட நட்டத்தை சமாளிக்க இலவசமாக ஒரு படத்தில் நடிக்க ரஜினி சம்மதம் தெரிவித்திருப்பதாகவும், இப்படத்தை இயக்கவிருப்பது ஏ.ஆர்.முருகதாஸ் என்றும் புதிய புதிய செய்திகள் கோடம்பாக்கத்தில் பரவுகின்றன.
குசேலன் படத்தில் கதையோடு ஒட்டிய வசனங்களும், காட்சிகளும் கர்நாடகா பிரச்சனையில் மன்னிப்பு கேட்டதும் ரஜினி ரசிகர்களை உசுப்பி விட, படம் மண்ணை கவ்விக்கொண்டது. இதில் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட விநியோகஸ்தர்கள் ரஜினியை தங்களுக்காக ஒரு படம் நடித்துத் தரும்படி கேட்டுக்கொண்டதாக ஒரு செய்தியும் உலாவுகின்றது.
ரஜினி விஷயத்தில் எதுவும் நடக்கலாம். அல்லது நடக்காமலும் போகலாம். இதில் எது உண்மை, எது பொய் என்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எது எப்படியோ வெறும் வாயை மென்னுகிட்டு இருக்கிறவங்களுக்கு அவல் கிடைச்சமாதிரி ரஜினி கிடைச்சிருக்கார்.
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள முதல் பிரமாண்டப் படம் " சத்யம் ". இப்படம் விஷாலின் சொந்தப்படமாகும். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகியுள்ள இத்திரைப்படம் 14 ம் திகதி திரைக்கு வருகிறது. தற்போது படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் தமிழில் UA சான்றிதழும் தெலுங்கில் A சான்றிதழும் கொடுத்துள்ளனர். படத்தில் வன்முறை, நயன்தாரா காட்டியுள்ள அளவுக்கதிகமான கவர்ச்சி போன்ற காரணங்களால் தணிக்கை குழுவினர் படத்துக்கு U சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டனர்.
படத்தில் வரும் "செல்லமே" பாடல் காட்சியில் நயனதாரா படு ஆபாசமாக நெளிவு, சுளிவுடன் ஆடியிருப்பதாக ஆட்சேபித்த தணிக்கைக் குழு, அப்பாடலில் பல அசைவுகளை கட் செய்யச் சொல்லிவிட்டனர். இந்தப் பாடல் காட்சிக்காகவே நயனதாராவும், விஷாலும் தங்களது உடல் பொலிவைக் கூட்டியிருந்தனர். நயனதாரா டயட் இருந்து, கடுமையாக உடற்பயிற்சி செய்து படு செக்ஸியாக மாறியிருந்தார். ஆனால் அவரது உடல் முறுக்கையும், காதல் நெருக்கத்தையும் பார்த்த தணிக்கைக் குழுவினர் மிரண்டு போய் பாடல் காட்சியில் பல இடங்களில் கத்தரிக்கோல் போட்டுவிட்டனர்.
மொத்த வாக்குகள் 68 வாக்களித்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றிகள். வாக்கு முடிவுகள் கீழே...
மொத்தம் 68 வாக்குகள்
குப்பையோ குப்பை - 31 வாக்குகள் பார்க்கலாம் - 17 வாக்குகள் குப்பை - 09 வாக்குகள் மட்டம் - 05 வாக்குகள் சூப்பரோ சூப்பர் - 05 வாக்குகள் பிரமாதம் - 01 வாக்கு