வேட்டைக்காரன்

Terminator III

Dindugal Sarathy

ஸ்பைடர் மேன்

மரண வலையமான பாதுகாப்பு வலையம் ( படங்கள் கோரமானவை )

Monday, February 16, 2009

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, புதுக்குடியிருப்பு , புதுமாத்தளன், ஆகிய பகுதிகளிலும் மற்றும் கோம்பாவில் பகுதியிலும் சிறிலங்கா படையினர் சனி,ஞாயிறு நடத்திய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் 134 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 208 பேர் காயமடைந்தனர்.


4 comments:

said...

கண்ணீர் தவிர வேறெந்த வகையில் நான் இவர்களுக்கு உதவ முடியும். இந்த புகைப்படங்கள் அத்தனையும் வேண்டாம் திவா. தயவுசெய்து டெலிட் செய்யுங்கள். சிதைந்து போன இந்த பிஞ்சுகளின் புகைப்படங்களை நான் இன்னொரு தரம் பார்க்க விரும்பவில்லை.
ஏற்கனவே காயமடைந்திருக்கிறேன். இப்போது என் பார்வையும் பறிபோனதாய் உணர்கிறேன்.

February 16, 2009 7:41 AM
said...

இந்த காட்சிகளையும் நிகழ்வுகளையும் நான் சிறு வயதில் அனுபவித்திருக்கிறேன்.
அந்த மரண பயத்தை இப்போதும் நினைத்துபார்க்க முடியவில்லை. தமிழனை முளையிலேயே கிள்ளி எரிந்திருக்கிறார்கள். என்ன செய்ய இவர்களுக்காக எம்மால் கண்ணீர் மட்டும்தான் விட முடியும். இந்த பாவச்செயல்களை செய்பவர்கள் நிச்சயம் ஒரு நாள் அனுபவித்தே தீருவார்கள்.

February 16, 2009 8:08 AM
said...

ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைகளை உலகிற்கு காட்டவேண்டியது நம் அனைவரினதும் கடமை. இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை நண்பரே.

February 16, 2009 6:07 PM
said...

என்னாலும் பார்க்க முடியவில்லை!!!!!

February 22, 2009 5:08 PM

Post a Comment